தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2,685 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்! - கோவையில் சிக்கிய 2,685 கிலோ போதைப் பொருள்கள்

கோவை: தனிப்படை காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில், 2,685 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டச்செய்திகள்
கோவையில் போதைப் பொருள்கள் பறிமுதல்

By

Published : Apr 21, 2021, 9:44 PM IST

கோவை மாவட்டம், அன்னூரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை காவலருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இமானுவேல் என்பவரது கடையில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ பான்பராக், குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

பான்பராக், குட்கா பறிமுதல்

இதனையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அன்னூர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் தனக்கு இந்த போதை வஸ்துகளை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அன்னூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பூபாலனுக்குச் சொந்தமான குடோனில் காவல் துறையினர் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 950 கிலோ பான்பராக், குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பூபாலன் கைதுசெய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் விசாரணை மேற்கொண்டபோது, இந்த இரண்டு கடைகளுக்கும் கோவை கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியிலிருந்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து தனிப்படை காவலர்கள் சோமனூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் ஹதாஜி என்பவர் நடத்திவந்த கணேஷ் ஏஜென்சியில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,700 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

குடோன் உரிமையாளர் கைது

மேலும், நந்தகுமார் என்பவருக்குச் சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து கிஷோர் ஹதாஜி பான்பராக், குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கணேஷ் ஏஜென்சியில் வேலை செய்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கன்னாராம் என்பவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

போதை வஸ்துகள் பதுக்க இடம் கொடுத்ததாக குடோன் உரிமையாளர் நந்தகுமாரும் கைது செய்யப்பட்டு, காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான கிஷோர் ஹதாஜியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details