தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி கொடுப்பதாகக்கூறி கம்பி நீட்டிய 2 பேர் கைது - கமிசனுக்கு கடன்

கோவையில் ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் பணத்தை மோசடி செய்து பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

2பேர் கைது
2பேர் கைது

By

Published : Apr 1, 2022, 8:01 PM IST

கோவை:ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியைச்சேர்ந்த உலர்பழங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருபவர், ஸ்ரீதேவி. இவரின் மொபைலுக்கு வந்த குறுஞ்செய்தி ஒன்றில் கமிஷனுக்கு கடன் பெற்றுத்தரப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஏற்கெனவே, ஸ்ரீதேவி அவரது தொழில் நிமித்தமாக எங்கெங்கேனும் பணம் கிடைக்குமா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், குறுஞ்செய்தியில் வந்த எண்ணைத்தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கோவையைச் சேர்ந்த கெளதம் என்பவர் பணம் ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார்.

கமிஷனுக்கு கடன்:இதற்காக கெளதம் தனக்கு ரூ.25 லட்சம் கமிஷன் தர வேண்டும் எனக் கூறியதையும் ஸ்ரீதேவி ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து ஸ்ரீதேவி தனது மகன் ரமணா என்பவர் மூலம் கமிஷன் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். கெளதம், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரி அருகே வருமாறு கூறவே, ரமணாவும் அங்கு சென்றுள்ளார்.

அப்போது, கெளதம் உள்ளிட்ட இருவர் அட்டைப் பெட்டி ஒன்றைக் கொடுத்து, அதில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனை நம்பிய ரமணா அவர்களிடம் ரூ.10 லட்சம் பணம் இருந்த பையைக் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட இருவரும் அங்கிருந்து உடனே பைக்கில் சட்டென்று தப்பிச்சென்றுள்ளனர்.

பணத்திற்கு பதிலாக ஏமாற்றிக் கொடுக்கப்பட்ட பொருட்கள்

கம்பி நீட்டிய இருவர்:இதனால் சந்தேகம் அடைந்த ரமணா, பெட்டியைப் பிரித்து பார்த்தபோது, அதில் சில பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிரஷ்கள் மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், அவர்களைத் துரத்திச்செல்ல முயன்றும், அவர்கள் கிடைக்காததால் இதுதொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி பணத்துடன் மாயமான இருவரைக் கைது செய்தனர்.

கைது நடவடிக்கை: கைதானவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் கெளதம் என்ற போலியான பெயரைப் பயன்படுத்தியதும், அவர்கள் சுந்தராபுரத்தைச் சேர்ந்த ஜனகன்(42) என்பதும் மற்றொருவர் செட்டிபாளையத்தைச் சேர்ந்த மார்டின் அமல்ராஜ்(42) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே ரமணா தான் அளித்தப்புகாரில் ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறியிருந்த நிலையில், அவர் கொடுத்த பையில் ரூ.10 லட்சம் மட்டுமே இருந்தது என்பது தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஜனகனும், மார்ட்டினும் மோசடியாக பெற்ற பணத்தைக் கொண்டு, தங்களது கடன்களை அடைத்துவிட்டு, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டாடியதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:பிரதமர் நரேந்திர மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ABOUT THE AUTHOR

...view details