தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மே 11ஆம் தேதி 16ஆவது சட்டப்பேரவை கூடுகிறது - Legislative Assembly convenes on May 11

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் மே 11ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

16th Tamil Nadu Legislative Assembly convenes on May 11
16th Tamil Nadu Legislative Assembly convenes on May 11

By

Published : May 9, 2021, 5:43 PM IST

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் மே 11ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கின் 3ஆவது தளத்தில் நடைபெறுகிறது.

அன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

தொடர்ந்து வரும் மே 12ஆம் தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் பத்திரிகையாளர்களுக்கு நாளை காலை 10 மணி முதல் 3 மணி வரை கலைவாணர் அரங்கில் கரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details