கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக காவல் துறை, தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்கள் களத்தில் உள்ள ஆபத்தை தாண்டி பணியாற்றி வருகின்றனர். காவல் துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும் நோய்த் தொற்றுக்கு ஆளாவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கள பணியாளர்களுக்கு ஜின்க், வைட்டமின் மாத்திரைகள் - தமிழ்நாடு அரசு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: கள பணியாளர்களுக்கு நாளை முதல் 10 நாட்களுக்கு ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக அனைத்துத் துறை கள பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின், ஜின்க் மாத்திரைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கரோனா நோய்த் தடுப்புப் பணியில் தன்னலம் கருதாமல் கள பணியாற்றுகிற, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை மற்றும் அனைத்துத் துறை கள பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நோக்கத்துடன், ஜிங்க் மாத்திரைகளும் (Zinc Tablet ), மல்டி வைட்டமின் மாத்திரைகளும் (Multi Vitamin Tablet ) நாளை (27.4.2020) முதல் 10 நாட்களுக்கு அரசால் வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.