தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யூ-டியூப்பர் மாரிதாஸ் கைது விவகாரம் - விசாரணையை தடை விதிக்கக் கோரி மனு - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாரிதாஸ் என்பவர் தன் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Dec 11, 2021, 5:37 PM IST

மதுரை:பிரபல யூ-டியூப்பரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் கருத்து ஒன்றை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து திமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது வழக்கு விசாரணை தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு திங்கள்கிழமை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க:மாரிதாஸ் கைது: புதூர் காவல் நிலையம் முற்றுகை

ABOUT THE AUTHOR

...view details