தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பப்ஜி மதன் தலைமறைவு - காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை

சென்னை: மதன் நடத்திவரும் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கும், இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கும் புளியந்தோப்பு சைபர் செல் காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில் மதன் தலைமறைவாகியுள்ளார்.

youtuber-madhan-absconding
youtuber-madhan-absconding

By

Published : Jun 14, 2021, 7:47 PM IST

யூடியூபில் பப்ஜி விளையாடி ஆபாச பேச்சு மூலம் சிறுவர், சிறுமியரை சட்டவிரோதமாக ஈடுபடுத்தி வரும் மதனின் யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தலைமறைவான மதனை தேடி வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

"பப்ஜி"

தடை செய்யப்பட்ட "பப்ஜி" எனும் ஆன்லைன் விளையாட்டை சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணைய சேவை மூலம் பயன்படுத்தி ஆபாசமாக பேசி சிறுவர், சிறுமியரை விளையாட்டில் ஈடுபடுத்துவதாக மதன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை சைபர் கிரைம் பிரிவில் இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமறைவு

இந்த வழக்கில் யூடியூபர் மதன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், மதன் ஆஜராகவில்லை. தலைமறைவாக உள்ள மதனை கைதுசெய்ய காவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, "பப்ஜி, யூடியூபர் மதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி வருவதும், அதில் 18 வயதுக்குட்பட்டோரை ஈடுபடுத்தியதும், ஆபாச பேச்சுகளும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்கிற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பேசி மிரட்டல்

பெண்கள் பற்றி ஆபாசமாக பேசி மிரட்டுவது, இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் ஆபாச வீடியோ கால் பேசுவது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பிறகே உறுதிப்படுத்த முடியும் என்கின்றனர் காவல்துறையினர். இந்நிலையில், பப்ஜி விளையாட்டை நேரலையில் தனது யூடியூப் சேனலில் ஒளிப்பரப்பி வரும் மதன், இதன் மூலம் சுமார் 8 லட்சம் பார்வையாளர்களை வைத்துள்ளார்.

ஆபாச பேச்சு அடங்கிய இந்த வீடியோக்களை பதிவேற்றி வைத்திருக்கும் "மதன்", "மதன் ஓ.பி", "டாக்ஸிக் மதன் 18 பிளஸ்", ஆகிய சேனல்களை முடக்க காவல் துறையினர் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். விபிஎன் எனும் விர்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கை மதன் பயன்படுத்துவதால், அவனது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை" என்றும் காவல்துறையினர் கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details