சென்னை:மாரிதாஸ் பதில்கள் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவருபவர் மாரிதாஸ். இவர், 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் தனியார் தொலைக்காட்சியில் பணிப்புரியக்கூடிய ஊழியர்கள் பற்றியும், சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சியின் நிர்வாகி அனுப்பியதாக மின்னஞ்சலை காண்பித்து மாரிதாஸ் பேசியிருந்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த வினய் சரவோகி என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். மாரிதாஸ் போலியான மின்னஞ்சலை காண்பித்தும், ஊழியர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையானது நடைபெற்று வந்தது.