தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்களின் வால்யூம் கவர்களை திருடும் வடமாநில இளைஞர்கள்... பிரபல நடன இயக்குநர் எச்சரிக்கை... - BMW Car

பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்களின் வால்யூம் கவர்களை வடமாநில கும்பல் திருடுவதாக பிரபல நடன இயக்குநர் வீடியோ மூலம் எச்சரிக்கைவிடுத்துள்ளார்

பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்களின் வால்யூம் கவரைத் திருடும் வடமாநில இளைஞர்கள்
பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகனங்களின் வால்யூம் கவரைத் திருடும் வடமாநில இளைஞர்கள்

By

Published : Aug 29, 2022, 11:40 AM IST

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் பிரபல நடன இயக்குநர் ஸ்ரீதர் நேற்று (ஆகஸ்ட் 28) தியாகராய நகர் பெருமாள் கோயில் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் தனது பிஎம்டபிள்யூ காருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்கில் பணியாற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர், ஸ்ரீதரின் கவனத்தை திசை திருப்பி கார் சக்கரங்களில் இருந்த வால்யூம் கவர்களைத் திருடி காத்தடிக்கும் எந்திரத்தின் பெட்டிக்குள் போட்டுள்ளனர்.

நடன இயக்குனர் ஸ்ரீதர்

இருப்பினும் இதைக்கண்ட ஸ்ரீதர், அந்த இளைஞர்களிடம் காத்தடிக்கும் எந்திரம் பெட்டியை திறக்க கோரி முறையிட்டு, கவர்களை திரும்பப்பெற்றார். அதோடு அந்த பெட்டியில் இன்னும் பல வால்யூம் கவர்கள் கிடந்துள்ளன. இதனால் அவர் வீடியோ மூலம், எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ. 92 லட்சம் மோசடி செய்த பலே தம்பதி

ABOUT THE AUTHOR

...view details