தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேருந்து கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்கள் கைது

மதுபோதையில் பேருந்தை வழிமறித்து இரும்பு பைப்பால் பேருந்து கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

பேருந்து கண்ணாடியை உடைப்பு
பேருந்து கண்ணாடியை உடைப்பு

By

Published : Nov 6, 2021, 10:47 AM IST

சென்னை: திருவான்மியூரிலிருந்து தடம் எண். 47டி மாநகரப் பேருந்து நேற்று (நவ.05) காலை ஆவடிக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் சிற்றரசு (51) என்பவர் இயக்கி வந்தார். இந்த பேருந்து ஆவடி சி.டி.எச் சாலை, பேருந்து நிலையத்திற்குள் நுழைய முற்பட்டது.

அப்போது, சாலையில் மது போதையிலிருந்த மூவர் பேருந்தை வழிமறித்து, கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உதைத்தனர். இதனால் பேருந்திலிருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.

சிசிடிவி காட்சி

இதனையடுத்து, ஓட்டுநர் சிற்றரசு பேருந்தை உடனடியாக சாலையில் நிறுத்தி அந்த கும்பலை விரட்டினார். இதனைக் கண்ட ஆவடி பேருந்து பணிமனையிலிருந்த ஊழியர்கள் ஓடி வந்தனர். பின்னர், அவர்கள் போதையிலிருந்த மூவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து ஆவடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

பின்னர், அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆவடி காந்திநகர், பெரியார் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (25), இன்பேண்ட் ராஜ் (30) காந்திநகர் 5ஆவது தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:மதுபோதையில் வந்த 'அண்ணாத்த' ரசிகர்கள்: திரையரங்கிற்குள் விடாதால் கண்ணாடி உடைப்பு

ABOUT THE AUTHOR

...view details