சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் திருமூர்த்தி(20). இவர், கடந்த மாதம் செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து வெளியான திருமூர்த்தி கடந்த நான்கு நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதைப் பார்த்த அவருடைய தந்தை குசேலன் திருமூர்த்தியை கோபமாக திட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
தந்தை திட்டியதால் மனமுடைந்த திருமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக் கொண்டார். தூக்குக் கயிற்றில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தாம்பரம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.