கேரளாவைச் சேர்ந்த இளைஞர் அஜினோ சிவதாசன் (33). இவரது நண்பர் ஒருவர், சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளர் பணி வாங்கி தருவதாகவும், அதற்கு 5 லட்ச ரூபாய் தேவைப்படுமென்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய அஜினோ, அந்த நபரிடம் முன்பணமாக 3 லட்ச ரூபாயும், வேலை கிடைத்தவுடன் மீதமுள்ள 2 லட்ச ரூபாயைத் தருவதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், மூன்று மாதங்களுக்கு பிறகு அந்த நபர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவு கார்ப்பரேஷன் அலுவலகத்தில் வைத்து அஜினோவிடம் சுருக்கெழுத்தாளர் பணிக்கான நியமன ஆணையை வழங்கியுள்ளார். இதனையடுத்து,அங்குள்ள அதிகாரிகளிடம் பணி நியமன ஆணையை கொண்டு சென்று அஜினோ காட்டியுள்ளார். அப்போது, அது போலியான ஆணை என்று தெரியவந்ததையடுத்து, உணவுக் கழக அலுவலர் ஆயிரம் விளக்கு காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார்.