சென்னை: சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (21). இவரது வீட்டிற்கு அருகாமையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி, குழந்தைகளை வீட்டில் விட்டு, ஆட்டோ ஓட்டுநர் அவரது மனைவியுடன் மாஸ்டர் திரைப்படம் பார்க்கத் திரையரங்கிற்கு சென்றுள்ளார்.
படம் முடிந்ததும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, அவர்களது 13 வயது மகள் மட்டும் காணாமல் போயுள்ளார். நீண்ட நேரமாக தேடிய போதும் கிடைக்காத சிறுமி, இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
எங்கே சென்றாய் என சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நண்பர்கள் மூலமாக பக்கத்து வீட்டில் வசித்து வரக்கூடிய வினோத் அறிமுகமானார். பின்னர் சிறுமிக்கு வினோத் மீது காதல் ஏற்பட்டுள்ளது.