தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னைக்கு வேலை தேடி வந்த போட்டோகிராபருக்கு காத்திருந்த சோகம் - photographer dies in train accident

சென்னைக்கு வேலை தேடி வந்த போட்டோகிராபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

youth-killed-in-train-accident-near-chennai
youth-killed-in-train-accident-near-chennai

By

Published : Mar 11, 2022, 10:02 AM IST

தஞ்சாவூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ்(27) என்பவர் போட்டோகிராபர் செய்துவந்தார். இவர் ஐந்து நாள்களுக்கு முன்பு சென்னை வந்து ஆவடி அருகே உள்ள அண்ணனூரில் தங்கி வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் விக்னேஷ், மார்ச் 8ஆம் தேதி தனது பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டு அண்ணனூர் ரயில்வே கேட் வழியாகத் தண்டவாளத்திலேயே சென்றுள்ளார்.

அப்போது அரக்கோணத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மின்சார ரயில் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து ஆவடி ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னைக்கு வேலை தேடி வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நேபாளம் பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details