தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடிபோதையில் தகராறு - இளைஞரின் காதை கடித்து துப்பிய கும்பல் - சென்னை குற்றச் செய்திகள்

சென்னையில் டாஸ்மாக் கடை அருகே மது பாட்டிலை கீழே தள்ளிவிட்டதை தட்டிக்கேட்ட இளைஞரின் காதை கடித்து துப்பிய மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குடிபோதையில் தகராறு
குடிபோதையில் தகராறு

By

Published : Sep 6, 2021, 2:08 PM IST

சென்னை:மேற்கு மாம்பலம் ஜானகியம்மாள் தெருவைச் சேர்ந்தவர் பிரமோத் (24). இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதுடன், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்து வருகிறார்.

இவர், நேற்றிரவு (செப்.05) மேற்கு மாம்பலம் பக்தவசலம் தெருவிலுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு, அருகேவுள்ள இடத்தில் நின்று மது அருந்தியுள்ளார்.

அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த மூன்று பேர் எதிர்பாராத விதமாக பிரமோத்தின் மதுபாட்டிலை தள்ளிவிட்டனர். இதில் பாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால், பிரமோத் மூவருடன் தகராறில் ஈடுபட்டார்.

இளைஞர்களுக்குள் தகராறு

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், பிரமோத்தை அடித்து உதைத்து, அவரது காதை கடித்து துப்பினர். இதில் அவரது காது அறுந்து தொங்கியது. மேலும், அந்த கும்பல் பிரமோத்திடம் இருந்த செல்ஃபோனையும் பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதில் படுகாயமடைந்த பிரமோத் கேகே நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அசோக் நகர் காவல் துறையினர், பிரமோத்தின் காதை கடித்து, செல்ஃபோனை பறித்துச் சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:குடிபோதையில் இளைஞர்கள் தகராறு - வெளுத்தெடுத்த பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details