சென்னை: மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காந்தி ராஜன் (25). இவர் வேளச்சேரியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இதனிடையே ரம்மியில் ரூ.2 லட்சம் இழந்துள்ளதாகவும், அதனால் காந்தி ராஜன் மன அழுத்தத்தில் இருந்தாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஏப்.13) அவரது வீட்டிற்கு தண்ணீர் கேன் போட வந்த நபர் ஜன்னலை திறந்து பார்த்தபோது காந்தி ராஜன் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.