சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஷ்வரன் (26). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு அவரது நண்பர் தினேஷ் என்பவருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, பாரிமுனையில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட வந்துள்ளார்.
உயர்நீதிமன்றம் அருகே வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த போது, எதிர்பாராதவிதமாக சாலைத் தடுப்பின் மீது மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த புவனேஷ்வரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் தினேஷ் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.