திருவள்ளூர்:மணலி புது நகரை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். மாணவியின் பெற்றோர் தெரிந்தவர்கள் என்பதால் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி, மாணவியின் வீட்டுக்குச் சென்ற ஜெயராமன், மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால், படிப்பு முடிந்த பின்னர் அது குறித்து பேசிக்கொள்ளலாம் என மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயராமன், மாணவியை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம், ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.