தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் கழுத்தறுத்து கொலை - இளைஞர் கைது - Kancheepuram Crime News

சென்னை: வீட்டு வாடகை தொடர்பான பிரச்னையில் உரிமையாளரின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Youth arrested for strangling homeowner
Youth arrested for strangling homeowner

By

Published : Jul 9, 2020, 11:29 AM IST

சென்னை அடுத்த குன்றத்தூர் பண்டார தெருவில் குணசேகரன்(50) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தன்ராஜ் என்பவர் 4000 ரூபாய் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். கரோனா பரவலால் கடந்த நான்கு மாதங்களாக வாடகை கொடுக்காததால் குணசேகருக்கும் தன்ராஜ் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று (ஜூலை 8) நள்ளிரவு மதுபோதையில் இருந்த தன்ராஜ் மகன் அஜித்(21) தான் வைத்திருந்த அரையடி நீளமுள்ள கத்தியால் குணசேகரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குணசேகரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த குன்றத்தூர் காவல்துறையினர், குணசேகரனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தப்பிச் சென்ற அஜித்தை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details