தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

லிஃப்டில் பெண்ணிடம் இளைஞர் அத்துமீறல்! - லிஃப்டில் பெண்ணிடம் இளைஞர் அத்துமீறல்

லிஃப்டில் தனியாக வந்த பெண் முன் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

abuse
abuse

By

Published : Jan 29, 2022, 5:19 PM IST

சென்னை : சென்னை சூளை பகுதியை சேரந்த 37 வயதுடைய பெண் ஒருவர் கீழ்பாக்கத்தில் உள்ள பிரின்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் ஹவுஸ் கீப்பிங் ஆக வேலை பார்த்துவருகின்றார்.

இந்நிலையில் நேற்று அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு காய்கறி டெலிவரி செய்வதற்காக சூளையைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்ற இளைஞர் வந்துள்ளார். பின்னர் காய்கறிகளை அடுக்குமாடி குடியிருப்பில் டெலிவரி செய்து விட்டு விக்னேஷ் ஆறாவது தளத்தில் இருந்து லிஃப்டில் கீழே இறங்கினார்.

அப்போது அங்கு வேலை பார்த்து வந்த அந்த பெண்ணும் அதே லிப்டில் ஏறி உள்ளார். இருவர் மட்டும் லிப்டில் தனியாக வந்த நேரத்தில் விக்னேஷ் தனது ஆடைகளை களைந்து ஆபாச செய்கைகள் காண்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண் வீட்டு உரிமையாளரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் இது குறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ்சை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : சிக்கிய Chikka... போலீஸ் பக்கா... ரவுடி பேபி Surya... கைது செஞ்சுட்டாங்கப்போறீயா

ABOUT THE AUTHOR

...view details