73ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநில இளைஞர் விருது, அட்சயம் அறக்கட்டளையைச் சேர்ந்த நவீன் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அட்சயம் அறக்கட்டளை கடந்த ஆறு ஆண்டுகளாக சாலைகளில் சுற்றித் திரியும் யாசகர்களிடம் உரையாடி அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது. இத்தகைய மகத்தான சேவையில் ஈடுபட்டுள்ள நவீன் குமாருக்கு மாநில அரசின் இளைஞர் விருது அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நவீன் குமார் கூறும்போது, ‘கடந்த 6 ஆண்டுகளில் 3,600 யாசகர்களிடம் உரையாடி 361 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளோம். பொதுமக்கள் யாசகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். யாசகர்களுக்கு உதவ வேண்டுமெனில், உணவு, உடை என அவர்களுக்குத் தேவைப்படுவதை வாங்கி வழங்கலாம். முதியவர்களைப் பேணிக் காப்பது இளைஞர்களின் கடமை. மாநில அரசின் இளைஞர் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருது எங்கள் பணியை இன்னும் சிறப்பாகச் செய்ய உதவும்' என்றார்.
'முதியவர்களைக் காப்பது இளைஞர்களின் கடமை' - இளைஞர் விருதுபெற்றவர் பேட்டி நவீன் குமாருக்கு கடந்த வருடம் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.