சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியின் 1ஆவது கேட் வழியாக நேற்று (ஆகஸ்ட் 15) இரவு 8 மணியளிவில் உள்ளே ஒருவர் நுழைந்தார். இதை விமான நிலைய பாதுகாப்பு கண்காணிப்பு கேமராவில் பாா்த்த பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அலுவலர்கள், உடனடியாக விரைந்து சென்று அவரை பிடித்து விசாரித்தனா்.
பலத்த பாதுகாப்பை மீறி விமான நிலையத்துக்குள் நுழைந்த இளைஞர் கைது - சென்னை மாவட்டம்
சென்னை: விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரை பாதுகாப்பு படையினா் மடக்கிப்பிடித்து சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அதில், அவரது பெயர் முரளிராஜ்(28) என்பதும் பழைய பல்லாவரத்தை சோ்ந்தவா் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவன மேலாளா் என்ற அடையாள அட்டை இருந்தது. அவரை பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் தான் டெல்லி செல்ல வந்ததாக கூறினாா். ஆனால் அவரிடம் விமான டிக்கெட் எதுவும் இல்லை. மேலும் விசாரணையில் நண்பரை வழியனுப்ப வந்ததாக கூறினாா்.
இதையடுத்து, சென்னை விமானநிலைய காவல்துறையினரிடம் முரளிராஜ் ஒப்படைக்கப்பட்டார். சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அந்த இளைஞர் எந்தவித சோதனைகளும் இல்லாமல் விமான நிலையத்திற்குள் சென்றது எப்படி? அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் எங்கு சென்றார்கள் ? உள்ளிட்டவை குறித்து பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (BCAS) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.