தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சொத்துத் தகராறு - அண்ணனை காரில் கடத்திய தங்கை கைது - சொத்து தகராறு

சொத்துத் தகராறு காரணமாக சொந்த அண்ணனையே கடத்திச் சென்ற அதிமுக பெண் பிரமுகர், கல்லூரி மாணவர்கள் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அண்ணனை காரில் கடத்திய தங்கை கைது
அண்ணனை காரில் கடத்திய தங்கை கைது

By

Published : Sep 8, 2021, 6:27 AM IST

சென்னை: பெரம்பூர் தீட்டித் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமன் (50). இவர், தனது தாய்க்கு சொந்தமான வீட்டில் பெற்றோர் தரைத்தளத்தில் வசித்து வரும் நிலையில் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.

புருஷோத்தமனுக்கும் அவரது தங்கைக்கும், அ.தி.மு.க கொளத்தூர் பகுதி 68ஆவது வட்ட செயலாளருமான வட்சலா (46) என்பவரும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு தங்கை வட்சலா தனது அண்ணனுக்கு தெரியாமல் அவர் வசிக்கும் வீட்டில் காலியாக உள்ள அறைக்கு தனக்கு தெரிந்த நபரை வாடகைக்கு குடியமர்த்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த நபரை அங்கிருந்து அனுப்பிவிட்டு வட்சலா தனது குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறினார். இதனால் தனது தங்கையை வீட்டை விட்டு காலி செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து புருஷோத்தமன் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

காவல் நிலையத்தில் புகார்

இதற்கிடையே கடந்த 5 ஆம் தேதி புருஷோத்தமன் வேப்பேரி ரித்திடன் சாலை சந்திப்பில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது அதிமுக கொடி கட்டிய காரில் வந்த அவரது தங்கை வட்சலா, அவரது குடும்பத்தினர் புருஷோத்தமனை அடித்து உதைத்து, அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியருகே கடத்தல் கும்பலிடமிருந்து தப்பி வந்த புருஷோத்தமன், செப்.06 ஆம் தேதி இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேப்பேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

விசாரணையில் சொத்துத் தகராறில் புருஷோத்தமனை அவரது தங்கையே காரில் கடத்தி சென்றது உறுதியான நிலையில் வட்சலா மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவரது கணவர் லோகநாதன் (50), கடல்வள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் மகன் ஜெயராம்(21) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மற்றோரு மகன் ருத்ரன்(21) உட்பட 4 பேரை வேப்பேரி காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடந்துவருகிறது.

இதையும் படிங்க:குடிபோதையில் தகராறு - இளைஞரின் காதை கடித்து துப்பிய கும்பல்

ABOUT THE AUTHOR

...view details