சென்னை அம்பத்தூர் அருகே ஓரகடம் லட்சுமி அம்மன் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, இவரின் மனைவி நிர்மலா(30). இருவரும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது 2 மகன்களையும் வீட்டில் விட்டுவிட்டு அக்கம் பக்கத்தினரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்றதும் குழந்தைகள் தெருவில் விளையாடினர். அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர், சக்கரவர்த்தின் வீட்டுக்குள் புகுந்து பீரோவை திறந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை அடைத்து வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு உரிமையாளர் சக்கரவர்த்திக்கு தகவல் கொடுத்தனர் .