சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில், வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (ஜூன் 1) காலை ஹைதரபாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த சிறப்பு ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவரை பிடித்து சோதனை செய்தனர். அவரின் இடுப்பு பகுதியில், ரூ.28 லட்ச ரூபாய் பணத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.