தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வயிற்று வலி தாளாமல் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு! - young man committed suicide

திருவொற்றியூரில் வயிற்று வலி காரணமாக இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் தீக்குளித்து தற்கொலை
இளைஞர் தீக்குளித்து தற்கொலை

By

Published : Sep 3, 2021, 8:06 AM IST

சென்னை: திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி. இவருடைய மகன் அபினாஷ் (20). வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று (செப்.02) காலை தனது வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

மாணவர் உயிரிழப்பு

அவருடைய அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அபினாஷை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அபினாஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற காவல் துறையினர், அபினாஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

வயிற்று வலி காரணமா?

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அபினாஷின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தீராத வயிற்று வலியில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

தற்கொலை தீர்வல்ல

தொடர்ந்து, வயிற்று வலி காரணமாக மாணவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை- கேரளாவில் இளம்பெண் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details