இது தொடர்பாக சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"சென்னை குடிநீர் வாரியம், பணிமனை 65, பகுதி 6இல் அமைந்துள்ள வில்லிவாக்கம் செக்டார் ஏ உயர் அழுத்த தொடர் கழிவு நீர் இறைக்கும் நிலையத்திலிருந்து 700 மிமீ விட்டமுள்ள கழிவுநீர் குழாயை 200 அடி சாலையிலுள்ள பிரதான கழிவுநீர் குழாயுடன் இணைக்கும் பணி ஆகஸ்ட் 28 அன்று காலை 9.00 மணி முதல் 29ஆம் தேதி காலை 9.00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேற்கண்ட பணியின்போது பகுதி அலுவலகம் 6இல் உள்ள கொளத்தூர் பகுதி அலுவலகம் 3இல் உள்ள புத்தகரம், பகுதி அலுவலகம் 7இல் கொரட்டூர், பகுதி அலுவலகம் 8இல் உள்ள பாபா நகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் இறைக்கும் பணி நிறுத்தப்படுகிறது.
எனவே, கழிவுநீர் சம்பந்தமாக புகார் தெரிவிக்க கீழ்காணும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் வேண்டப்படுகிறது.
பகுதிப் பொறியாளர் 3 - 8144930903
து ப பொ 6 - 8144930206