தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாதுகாப்பாற்ற முறையில் உள்ள மரங்கள் குறித்து 1913 என்ற உதவி எண்ணிற்கு அழைக்கலாம் - மாநகராட்சி - You can call the helpline number

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள 19,025 மரங்களின் கிளைகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.

மரங்களின் கிளைகள் குறித்து 1913 என்ற உதவி எண்ணிற்கு அழைக்கலாம்
மரங்களின் கிளைகள் குறித்து 1913 என்ற உதவி எண்ணிற்கு அழைக்கலாம்

By

Published : Nov 4, 2021, 8:36 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளில் 34,224 சாலைகளில் சுமார் 1,75,309 மரங்கள் உள்ளன.

மாநகராட்சியின் சார்பில் பருவமழை காலத்திற்கு முன்னதாகவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மாநகராட்சியில் 6 நவீன ஹைட்ராலிக் இயந்திரங்களும், 2 மரம் அறுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 15 மண்டலங்களிலும் உள்ள 371 கையால் இயக்கும் மர அறுவை இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 3 மாதங்களில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விழும் நிலையில் இருந்த சுமார் 19,025 மரக்கிளைகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரங்கள் குறித்து 1913 என்ற உதவி எண்ணிற்கும் 044-2561 9206.044 2561 9207 மற்றும் 044 2561 9208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், வட்டார துணை ஆணையாளர் அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சாலையில் கிடந்த பள்ளத்தால் இளைஞர் உயிரிழப்பு - நெடுஞ்சாலைத் துறையிடம் விளக்கம் கேட்ட போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details