சென்னை:பிக்பாஸ் பிரபலம் யாஷிகா தனது நண்பர்களுடன் கடந்த ஜூலை 25ஆம் தேதி காரில் சென்றபோது, விபத்தில் சிக்கினார். இதில், அவரின் தோழி வள்ளி ஷெட்டி உயிரிழந்த நிலையில் யாஷிகா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.
அவர் குறைந்தது ஐந்து மாதங்களுக்கு எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது யாஷிகா தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
யாஷிகா பதிவு
இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் காலில் கட்டுடன் கட்டிலில் படுத்திருக்கும் யாஷிகாவுக்கு அவரது தாயார் உணவு ஊட்டுகிறார்.
யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை மேலும், இந்த பதிவில் என்னுடைய பலம் (My strength) என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த யாஷிகாவின் ரசிகர்கள், ''நீங்கள் விரைவில் நலமுடன் மீண்டுவர வேண்டி நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்" என ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க:‘தேன்’ திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசின் விருது