தமிழக பாஜக துணைத்தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மதவாத அமைப்புகள், நக்சலைட்டுகள் ஆகியோரிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் 6 அதிகாரிகள் சுழற்சி முறையில் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைக்கு ’Y’ பாதுகாப்பு! - அண்ணாமலை
சென்னை: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ips
இது குறித்துப் பேசிய அண்ணாமலை, ”பாஜகவை பொறுத்தவரை மதங்களுக்கு அப்பாற்றப்பட்ட கட்சி. அனைத்து மதங்களையும் சமமாகத்தான் பாவிக்கிறோம். எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் ஆணையத்திடம் இருந்து அறிக்கை வந்துள்ளது. எனவே, சுழற்சி முறையில் இருவர் என்னுடன் பயணிப்பார்கள். அது மட்டுமல்லாது வீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் உயிருக்கு ரேட் ஃபிக்ஸிங்: பேஸ்புக்கில் பேரம் பேசியவர் கைது!