சென்னை: ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையிலும், "ஒரே ஒரு பூமி" என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
பூமியைப் பாதுகாக்க அதிகளவில் மரங்களை நட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.