சென்னை : மூட்டு அழற்சி மற்றும் வதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அக். 12ம் தேதி உலக மூட்டு அழற்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடைபிடிக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உலக மூட்டு அழற்சி தினம் கடைபிடிப்பு - மூட்டு அழற்சி நோய்
மூட்டு வலி பாதிப்பு ஏற்பட்ட உடன் தகுந்த சிசிக்கை மேற்கொண்டால் வலி முடக்கம் மற்றும் அனைத்து மூட்டு பாதிப்புகளையும் தடுக்கலாம் என ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் கருத்து.
![ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உலக மூட்டு அழற்சி தினம் கடைபிடிப்பு World Arthritis Day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9149920-264-9149920-1602513418724.jpg)
இதில் பேசிய மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மூட்டு அழற்சியால் பாதிக்கப்பட்டு முடங்கி போய் உள்ளனர். இந்த மூட்டு அழற்சி நோய் அனைத்து வயதினரையும் தாக்க கூடியது. மூட்டுவலி ஏற்பட்ட உடன் தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் வலி முடக்கம் மற்றும் அனைத்துப் பாதிப்புகளையும் தடுக்கலாம். இதற்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது என கூறினார்
இதையும் படிங்க :ஊதிய உயர்வு கோரி தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்