தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு! - சென்னை

பல்லாவரம் ரேடியல் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக முழுமையாக மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கூலித் தொழிலாளி பலி
பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கூலித் தொழிலாளி பலி

By

Published : May 12, 2022, 2:20 PM IST

சென்னை: பல்லாவரம் ரேடியல் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காக 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, காங்கீரிட் போடப்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரீட்டின் பக்கவாட்டில் பள்ளம் முழுமையாக மூடப்படாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் இரு தினங்களாக மழை பெய்து ஈரப்பதமாக இருந்ததால் இன்று காலை பணிக்கு வந்த கொல்கத்தாவை சேர்ந்த கூலித் தொழிலாளியான திரேஸ் சர்க்கார் (50) என்பவர் மேலே கால் வைத்த போது மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சென்ற சிட்லபாக்கம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மாதவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் - கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details