சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 18 ஆம் தேதி 2022-2023 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் (மார்ச் 19) வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இந்த நிலையில், பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் மார்ச் 21 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஏப்ரல் 6) மீண்டும் கூடியது. அதில், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார். அப்போது அவர், "சோழவந்தான் தொகுதி, கல்வேலிப்பட்டி, கொண்டையம்பட்டி, இடையபட்டி ஆகிய பகுதிகளில் தேவையின் அடிப்படையில் புதிய துணை மின் நிலையம் அமைத்து தரப்படும்.
தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் செய்ய 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 193 துணை மின் நிலையங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 துணை மின் நிலையங்களுக்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.