தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணிக்காலத்தில் காலமான 12 பேரின் வாரிசுகளுக்கு பணி! - எடப்பாடி பழனிசாமி

சென்னை: பணிக்காலத்தில் காலமான 12 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

function
function

By

Published : Jan 23, 2021, 2:59 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான, 12 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில், உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி - 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை ஈட்டிய நிகர லாபத்தில் தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகையாக 2017-18ஆம் ஆண்டிற்கு 1 கோடியே 86 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மற்றும் 2018-19ஆம் ஆண்டிற்கு 53 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 2 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, முதலமைச்சரிடம் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

’கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலை ஈட்டிய நிகர லாபம்’

இதையும் படிங்க: ஏழு பேரை விடுதலை... விரைவில் நல்ல தீர்வு: ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details