தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெப்பர் ஸ்ப்ரேவை விட பெண்களின் தன்னம்பிக்கை அவர்களுக்குப் பாதுகாப்பு - கமல் கருத்தால் சமூக வலைதளத்தில் வெடித்தது விவாதம் - Latest kamalhassan controversy

பெப்பர் ஸ்ப்ரேவை விட பெண்களின் தன்னம்பிக்கையே அவர்களுக்குப் பாதுகாப்பு என்று கமல் கூறிய கருத்தால் சமூக வலைதளத்தில் சர்ச்சை வெடித்துள்ளது.

பெப்பர் ஸ்ப்ரேவை விட பெண்களின் தன்னம்பிக்கை அவர்களுக்கு பாதுகாப்பு - கமல் கருத்தால் சமூக வலைதளத்தில் வெடித்தது விவாதம்
பெப்பர் ஸ்ப்ரேவை விட பெண்களின் தன்னம்பிக்கை அவர்களுக்கு பாதுகாப்பு - கமல் கருத்தால் சமூக வலைதளத்தில் வெடித்தது விவாதம்

By

Published : Jan 3, 2021, 7:05 PM IST

பெண்களின் தற்காப்புக்கு கண்ணியம், சமநிலையும் இருந்தால் போதுமானது எனவும்; வன்முன்றையின்மையைவிட அது சிறந்தது எனவும்; பெப்பர் ஸ்ப்ரேவை விட பெண்களின் தன்னம்பிக்கை அவர்களுக்கு உதவும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

மய்யம் மாதர் படையைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் என்பவர், 'பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தற்காப்புக் கலைகளைப் பெண்கள் கற்க வேண்டும்' என்று காணொலி ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

சினேகா மோகன் தாஸ் வெளியிட்ட ட்வீட்

இதனை ரீ-ட்விட் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், 'பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கண்ணியம், சமநிலை மட்டும் போதுமானது. வன்முறையின்மையைப் பின்பற்றினால் வன்முறை செய்பவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். பெப்பர் ஸ்ப்ரேவை விட பெண்களின் தன்னம்பிக்கை அவர்களுக்கு உதவும்' எனப் பதிவு செய்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெண்கள் ஏன் தற்காப்புக் கலையைக் கடைப்பிடிக்க கூடாதா என்று நெட்டிசன்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
கமல்ஹாசன் செய்த ரீ - ட்விட்

இதையடுத்து, 'கமல்ஹாசனின் பதிவை தவறுதலாகப் பலர் புரிந்து கொண்டது வருத்தம் அளிக்கின்றது. கமல்ஹாசன் கூறுவது பெண்கள் தன்னம்பிக்கை உடன் எதிரிகளை எதிர்க்க வேண்டும் என்பதே" என சினேகா மோகன்தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார்.

விளக்கிய சினேகா மோகன் தாஸ்
சமீப நாட்களில் தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயி, தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனின் கருத்தை விமர்சித்துள்ளார்.
பாடகி சின்மயி
இதே போல் 2014ஆம் ஆண்டு, கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், 'நல்ல பெண்களை ஆண்கள் கேலி செய்ய மாட்டார்கள்' என்று தெரிவித்திருந்த காணொலி திடீரென்று ட்விட்டர் பக்கத்தில், கடந்த இரண்டு தினங்களாக ட்ரெண்டிங்கிலேயே உள்ளது. இதற்கும் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
சின்மயி செய்த ட்வீட்
'தேர்தல் நேரம் என்பதால் திட்டமிட்டு கமல்ஹாசன் மீது அவதூறு பரப்புகின்றனர். பெண்களை மிகவும் மதிக்கக்கூடியவர் கமல்' என்று மய்யத்தினர் சமூக வலைதளத்தில் மறு விவாதத்தை செய்கின்றனர்.
சின்மயியை விமர்சித்த நெட்டிசன்கள்
இதையும் படிங்க:'மாற்றத்தை மக்கள் நீதி மய்யம் உருவாக்கும்' - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details