தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உயர் அலுவலர்கள் கொலை செய்ய சொன்னால் கொன்றுவிடுவீர்களா...? - எஸ்.பியிடம் உயர் நீதிமன்றம் காட்டம் - WOMEN SP SEXUAL HARRASEMENT

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Oct 20, 2021, 12:47 PM IST

Updated : Oct 20, 2021, 5:18 PM IST

12:25 October 20

பெண் எஸ்.பி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், சிறப்பு டிஜிபியின் உத்தரவின் பேரில் தான் செயல்பட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி தெரிவித்த நிலையில், உயர் அலுவலர்கள் கொலை செய்ய சொன்னால் அதையும் நீங்கள் செய்துவிடுவீர்களா என நீதிபதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் புகார் அளித்தார்.  

இதையடுத்து, சிறப்பு டிஜிபி மற்றும் அவரது உத்தரவின்பேரில் செயல்பட்டவரும் செங்கல்பட்டு எஸ்.பி-யாக இருந்த கண்ணன் ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

விசாகா குழு அறிக்கை

பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் அந்த குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், சிபிசிஐடி காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அப்போது, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கண்ணன், "சிறப்பு டிஜிபியின் அறிவுறுத்ததலின்படியே நான் செயல்பட்டேன்" என தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். 

வழக்கு தள்ளுபடி

அதற்கு, நீதிபதி வேல்முருகன், "உயர் அலுவலர் கொலை செய்யச் சொன்னால், நீங்கள் கொலை செய்வீர்களா?. உயர் அலுவலர்களே இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானால், காவல் துறை மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும்" என சராமாரியாக கேள்வியெழுப்பினார். மேலும், காவல்துறையில் பெண் அலுவலர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். 

இதையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெறுவாதாக எஸ்.பி. கண்ணன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கீழமை நீதிமன்ற விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்திரவிட்டார். 

இதையும் படிங்க: பெண் எஸ்பி பாலியல் வழக்கு: ஆஜராகாத முன்னாள் சிறப்பு டிஜிபி

Last Updated : Oct 20, 2021, 5:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details