சென்னை:பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அரசு உதவி எண்கள், செயலிகளை அறிவித்துள்ளது. குழந்தை உதவி எண் 1098, மகளிர் உதவி எண் 181, முதியோர் உதவி எண் 14567, இணையதள குற்றத்தடுப்பு உதவி எண் 1930 போன்ற இலவச உதவி எண்கள், காவலன் மற்றும் காவல் உதவி போன்ற கைபேசி செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.
இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கொள்கை விளக்கக் குறிப்பில், "2021-22 ஆம் ஆண்டில் 267 குழந்தைகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் தத்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்நாட்டு தத்தெடுப்பில் ஆண் குழந்தை -109, பெண் குழந்தை -139.
வெளிநாட்டு தத்தெடுப்பில் ஆண் குழந்தை -9, பெண் குழந்தை -10. மாநில மூத்த குடிமக்களுக்கான வரைவு கொள்கை 2022 விரைவில் வெளியிடப்படும். முதியோர் பராமரிப்பு பல்வேறு துறைகளால் கவனிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை, நீதித் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய் துறை போன்ற துறைகளில் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.