கர்நாடகா மாநிலம், பிடதி என்ற இடத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கடந்த 2003ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு பிராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது.
நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள தனது மகனை மீட்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் பெண் மனு - உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு
சென்னை: நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பிராணாசாமி என்பவரை மீட்கக் கோரி அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
high court
சமீபகாலமாக அவரை சந்திக்க பிடதி ஆசிரமத்தினர் தனக்கு அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்கக் கோரியும் அவரது தாய் அங்கம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.