திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சோம்பட்டு கிராமத்தில், கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி, வீட்டில் படுத்திருந்த வைதேகி என்ற பட்டதாரிப் பெண்ணை, பாம்பு கடித்தது. அவர் உடனடியாக சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போதிய மருத்துவ வசதி இல்லை என்பதால், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பாம்பு கடித்து பட்டதாரி பெண் உயிரிழப்பு - போதிய மருத்துவ வசதி இல்லாதது காரணமா?
பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த பட்டதாரிப் பெண் உயிரிழந்தார். போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லாதது உயிரிழப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
snake
அங்கு நான்கு நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கிராமப்புறங்களில் போதுமான மருத்துவ கட்டமைப்பு இல்லாததே இதுபோன்ற உயிரிழப்புக்குக் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.