தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மூச்சுத்திணறலால் பெண் உயிரிழப்பு! - சோதனையில் கரோனா உறுதி

சென்னை: மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பெண்ணிற்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

death
death

By

Published : May 4, 2020, 5:49 PM IST

பேசின் பிரிட்ஜ் பகுதியில் வசித்து வந்த 50 வயது பெண் ஒருவர், கடந்த சில ஆண்டுகளாகவே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மாதம் ஒரு முறை மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த அவருக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள், அவருக்கு கரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளை எடுத்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அப்பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், அவருக்கு கரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று இருப்பதும் உறுதியாகியுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details