தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மெரினாவில் குழந்தைகளைக் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்! - ஒருவர் மரணம், இருவர் கவலைக்கிடம் - woman suicide attempt

சென்னை: குடும்பத் தகராறு காரணமாக மெரினாவில் இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman suicide attempt at marina

By

Published : Oct 10, 2019, 9:02 AM IST

பெங்களூருவில் வசித்துவருபவர் பவித்ரா. இவரது இரண்டு குழந்தைகள் தனுஷ்யா (6), பத்மேஷ் (3). பவித்ரா குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதையடுத்து நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரைக்கு தனது குழந்தைகளுடன் வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள கடற்கரையில், பவித்ரா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இரண்டு குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பவித்ரா, குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அப்போது சிறுமி தனுஷ்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இருவரை மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மெரினா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


இதையும் படிங்க: கூவத்தில் ஆண் சடலம் மீட்பு - சந்தேக மரணமாக வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details