கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம். அங்கு அவரது வீட்டுப் பாதுகாப்புப் பிரிவில் சுழற்சி முறையில் ஆண், பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த பெண் காவலர் ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது.
இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊர் சென்றுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவு தற்போது வெளியான நிலையில், அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் உள்ள பிற காவல் துறையினருடன் சேர்ந்து பணியாற்றியவர் இவர். ஆகவே அந்தக் கோணத்திலும் அலுவலர்கள் விவரங்களைச் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.