ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்த பூபதி, மனைவி சுகந்தி(28) மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சுகந்தி தனது வீட்டிலிருந்து பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற போது, இந்துக்கல்லூரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலை சுகந்தி கவனிக்கவில்லை.
மின்சார ரயில் மோதி பெண் பலி! - ரயில் மோதி பெண் பலி
சென்னை: ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரயில் மோதி பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
accident
இதனால், அந்த ரயில் சுகந்தி மீது மோதியதில், நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி அவர் பரிதாபமாக இறந்தார். பின்பு அங்கு வந்த ஆவடி ரயில்வே காவலர்கள் உடலைக் கைப்பற்றி, கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கார் ஓட்டுநரும் ஆட்டோ ஓட்டுநரும் சாலையின் நடுவே அடிதடி!