சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.09) முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்க மயிலாடுதுறையைச் சேர்ந்த ஹிலர் நிஷா என்ற பெண் வந்திருந்தார். ஆனால், இன்று விடுமுறை என்பதால் காவல்துறை அதிகாரிகள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்க அனுமதி வழங்கவில்லை.
இது குறித்து ஹிலர் நிஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தனக்கு 19 வருடங்கள் கழித்து மூன்று குழந்தைகள், ஏழு மாதத்தில் பிறந்தன. குறைமாதத்தில் குழந்தைகள் பிறந்ததால் அதனை தனியார் மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைத்து பார்த்து கொண்டேன்.
ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதால் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்ததன் பேரில் சென்னை எழும்பூரிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு குழந்தை மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது.