கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு சென்னை ஐஐடி மாணவி ஒருவர் விடுதிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது உதவி கேட்டு மாணவி கூச்சலிட்டும் யாரும் வராததால், மாணவி மர்ம நபருடன் சண்டையிட்டு தன்னை காப்பாற்றி கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த மாணவி புகார் ஏதும் அளிக்காத நிலையில், மாணவியின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக, ஐஐடியில் வேலை பார்க்கும் வட மாநில நபர்களில் யாராவது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை காவல்துறை உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் ஐஐடி வளாகத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.