தமிழ்நாடு

tamil nadu

’கருணாநிதியின் நினைவின்றி இயக்கமில்லை’ - ஸ்டாலின் உருக்கம்

By

Published : Aug 6, 2021, 1:52 PM IST

இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் கருணாநிதி நினைவின்றி இயக்கமில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

CM STALIN
முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என எதுவாக இருந்தாலும் அரசியல் சதுரங்கத்தில் அதிரடியாகக் காய்களை நகர்த்தி அதில் வெற்றிகளைக் குவித்தவர் கருணாநிதி.

திராவிட அரசியலின் முதுகெலும்பாக கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நிலைத்துநின்ற அவர், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அரசியல் பயணத்தோடு, தன் மூச்சையும் நிறுத்திக் கொண்டார்.

நூற்றாண்டைத் தொட்ட தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றின் முக்கியத் தலைவரான முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு நாளை (ஆகஸ்ட் 7) மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்.

கருணாநிதி நினைவு நாள்

இதை நினைவுகூர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ’’ஆகஸ்ட் 7- இயற்கையின் கரங்கள் கொய்துசென்ற நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதிக்கு மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்; இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் எல்லா நாள்களிலும் - அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் இயக்கமில்லை’’ என மனமுருகி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்

கரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில்கொண்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் கருணாநிதியின் படத்தினை வைத்து, மாலையிட்டு, மலர்த்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டும் எனவும் அவர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் உதயமாகும் அறிவாலயம்

ABOUT THE AUTHOR

...view details