நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு வெளி பகுதியான மசினக்குடி பகுதியில், சுற்றித்திரிந்த ரிவால்டோ எனும் 40 வயது ஆண் யானையை வனத்துறையினர், யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.
யானையைப் பிடிக்க தடை விதிக்கக்கோரி வழக்கு

இந்நிலையில், யானையைப் பிடிக்க வனத்துறையினருக்குத் தடை விதிக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த விலங்குகள் ஆர்வலர் முருகவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரிவால்டோ யானை குணமடைந்து விட்டதாகவும், இந்த யானையால் எவரும் காயமடையவில்லை, எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதால் யானையைப் பிடிக்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
யானையைப் பிடித்து க்ராலில் வைத்து சிகிச்சை அளித்த பின், மீண்டும் வனப்பகுதியிலேயே விடப்படும் என அரசுத்தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
யானைகள் கணக்கெடுப்பு
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் வளர்ப்பு யானைகள் அதிகளவில் இருப்பதாகவும், காட்டு யானைகள், வளர்ப்பு யானைகளின் கணக்கெடுப்பு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மேலும், யானைகள் வழித்தடங்களில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.