சென்னை:2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தமிழ் வரலாற்றுச் சான்றுகளைச் சுட்டிக்காட்டி தை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவித்தார்.
பின் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சித்திரை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு என மீண்டும் பழைய முறையை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தற்போது மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தை 1 தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.