தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மரக்கன்றுகள் நடும் விழாவில் நடிகர் விவேக்கின் மனைவி - மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற

சென்னையில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, 150 மரக்கன்றுகளை நடும் விழாவில் கல்லூரி மாணவிகளுடன் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி கலந்துகொண்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 3, 2022, 9:31 AM IST

சென்னை: காந்தியின் 154வது பிறந்தநாளையொட்டி, நேற்று (அக்.2) நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள் செல்வி விவேக், கல்லூரி மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி மகளிர் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

இதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. ஸ்ரீராம் தலைமை தாங்கினார். இந்த விழாவில் நடிகர் விவேக் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மரக்கன்று நடும் விழாவை நடிகர் விவேக் மனைவி அருள் செல்வி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதில் தென்னக இரயில்வே பொது மேலாளர் மல்லையா, எல்.ஐ.சி. மண்டல அதிகாரி வெங்கட்ராமன், கல்லூரி முதல்வர் மகாலட்சுமி உள்பட 200 கல்லூரி மாணவிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

இதையும் படிங்க: காந்தியை கொன்றவர்களை மதிக்கக்கூடாது… சபாநாயகர் அப்பாவு ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details