சென்னை: புரசைவாக்கம் வைக்கோகாரன் தெருவில் அசோக் பாபு (53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்மினி (48) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி உள்ளார். இத்தம்பதிக்கு, ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் வெளியூரில் வேலை பார்த்து வர, திருமணமான இவரது மகள் தனது கணவரின் குடும்பத்தோடு பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், மகள் ஆர்த்தி கடந்த இரு நாள்களாக தனது தந்தை அசோக் பாபுவுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் செல்ஃபோனை எடுக்காததால், நேற்று (மே 23) போலீசாருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, பூட்டை உடைத்து உள்ள சென்று பார்த்தபோது, அசோக் பாபு நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார். அருகில் அசோக் பாபுவின் மனைவி பத்மினி (48) இறந்துபோன அசோக் பாபுவையே பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.